அடுத்து நிமோனியா பாதிப்பதால் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை வரலாம். நிமோனியா பாதிப்பு தீவிரமாகும்போது அது குழந்தைகளின் நுரையீரலை பாதிப்பது மட்டுமன்றி, அவர்களது உயிருக்கே ஆபத்தாக அமையலாம். இந்த பாதிப்பிலிருந்து குழந்தைகளைக் காக்கவும் நியூமோகாக்கல் தடுப்பூசிகள் இருக்கின்றன. குழந்தை பிறந்த 6, 10, மற்றும் 14 வாரங்களில் போடப்படும். பிறகு ஒன்றரை வயதில் பூஸ்டர் டோஸ் போடப்படும். பிறகு 6 மற்றும் 7 வயதில் போடப்படும். இந்தத் தடுப்பூசியானது மழைக்காலத்தில் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளிலிருந்தும் குழந்தைகளைக் காக்கும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது தீர்வாகாது. அவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். சரிவிகித உணவுப்பழக்கத்தைப் பழக்க வேண்டும். எல்லா சூழலுக்கும் அவர்கள் பழக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். அதைத் தவிர்த்து அவர்களைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதால் நோய் எதிர்ப்பாற்றல் குறையுமே தவிர, கூடாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.