Doctor Vikatan: 34 வயது இல்லத்தரசி நான். எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. துணி துவைக்கவோ, பாத்திரம் துலக்கவோ தண்ணீரில் கைவைத்தால் என் தலை பாரமாகி விடுகிறது. தலைக்குள் கடுமையான வலியை உணர்கிறேன். அதேபோல குளிர்ச்சியான இடத்துக்கோ, ஏசி செய்யப்பட்ட பகுதிக்கோ சென்றாலும் எனக்கு உடனடியாக தலைவலி வருகிறது. இது என்ன பிரச்னை? இதற்குத் தீர்வு உண்டா?
– Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து…
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்
நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது இது ‘வாசோமோட்டார் ரைனிட்டிஸ்’ (Vasomotor rhinitis ) என்ற பாதிப்பாக இருக்கலாம் என்று தெரிகிறது. ஒவ்வாமையல்லாத ஒருவகையான பாதிப்பு இது.