Doctor Vikatan: குடும்பக்கட்டுப்பாட்டுக்குப் பிறகு மறுமணம்; மீண்டும் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டா? | Doctor Vikatan: Remarriage After Family Planning; Is there a chance of having a baby again?

Share

Doctor Vikatan: என் வயது 32. திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த நிலையில் விவாகரத்தாகி விட்டது. முதல் பிரசவமானதுமே குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டேன். இப்போது டைவர்ஸுக்கு பிறகு மறுமணம் செய்யும் முடிவில் இருக்கிறேன். அப்படிச் செய்துகொண்டால் எனக்கு குழந்தை பிறக்கச் செய்ய வழி உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

லேப்ராஸ்கோப்பிக் டியூபோபிளாஸ்டி அல்லது லேப்ராஸ்கோப்பிக் ரீகேனலைசேஷன் என்ற முறையில், ஏற்கெனவே கத்தரித்த கருக்குழாய்களை இணைக்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் இந்தச் சிகிச்சையின் வெற்றி என்பது பல விஷயங்களைப் பொறுத்தது.

முதலில் செய்யப்பட்ட கருத்தடை சிகிச்சையின்போது வெட்டப்பட்ட கருக்குழாய்களின் நீளம், அமைப்பு ஆகியவை எப்படியிருக்கின்றன என்பது முதலில் பார்க்கப்பட வேண்டும். பிராக்ஸிமல் டியூப் மற்றும் டிஸ்ட்டல் டியூப் இரண்டும் போதுமான அளவு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், கருக்குழாய்களை இணைக்கிற இந்தச் சிகிச்சையின் வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com