Doctor Vikatan: சோள மாவு என்பது வேறு…. கார்ன் ஃப்ளார் என்பது வேறா? இதை சமையலுக்குப் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ரொட்டி செய்யப் பயன்படுத்தும் சோள மாவும் சரி, கார்ன் ஃப்ளாரும் சரி… சோளத்திலிருந்து எடுக்கப்படுவது தான். ஆனால் ஒவ்வொன்றும் எப்படிப் பதப்படுத்தப்பட்டு, சமைக்கப்பட்டு நம் தட்டுக்கு வருகிறது என்பதைப் பொறுத்து தான் அதன் ஊட்டச்சத்து பலன்கள் தீர்மானிக்கப்படும்.
கார்ன் சிரப் தயாரிக்கவும், சூப்பை கெட்டியாக்கவும், சாஸ் போன்றவற்றை சரியான பதத்துக்குக் கொண்டுவரவும் என பல விஷயங்களுக்காக கார்ன் ஃப்ளார் பயன்படுத்தப்படுவதுண்டு. குல்ஃபி தயாரிப்பில், இனிப்புகள் தயாரிப்பில், சமோசா போன்றவற்றை கரகரப்பாக்க, கிரேவி வகைகளை கெட்டியாக்க… இப்படி கார்ன் ஃப்ளாரின் உபயோகம் அதிகம்.