வயது 36. பிரசவத்துக்குப் பிறகு உடல் பருத்துவிட்டது. நான் காப்பர்டி பொருத்திக்கொண்டுள்ளேன். இந்நிலையில் நான் உடற்பயிற்சிகள் செய்யலாமா? கடினமான உடற்பயிற்சிகளால் காப்பர் டியின் பொசிஷன் மாற வாய்ப்புண்டா? காப்பர் டி சரியான பொசிஷனில்தான் இருக்கிறதா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?
– மல்லிகா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.
“பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது சகஜமாகப் பலரும் சந்திக்கிற பிரச்னைதான். சிசேரியன் பிரசவம் என்றால் மூன்று மாதங்களுக்குப் பிறகும், சுகப்பிரசவம் என்றால் 45 நாள்களுக்குப் பிறகும் மெள்ள மெள்ள உடற்பயிற்சிகளை ஆரம்பித்துச் செய்யத் தொடங்கி, எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காப்பர் டி பொருத்திக் கொண்டவர்களும் தாராளமாக உடற்பயிற்சிகள் செய்யலாம்.