Doctor Vikatan: என் வயது 58. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எனக்கு கழுத்தில் கட்டி போன்று வந்தது. பார்ப்பதற்கு அது தைராய்டு கட்டி போலவே இருந்தது. டெஸ்ட் செய்து பார்த்ததில் தைராய்டு அளவுகள் நார்மலாக இருப்பதாகச் சொல்லி, மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை என மருத்துவர் சொல்லிவிட்டார். அந்தக் கட்டியை பயாப்சி டெஸ்ட்டுக்கு அனுப்பியதில் அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை என்று வந்துவிட்டது. ஆனாலும் இதை இப்படியே விட முடியாது… பின்னாளில் இது புற்றுநோயாக மாற வாய்ப்புண்டு, ஆபரேஷன் செயய வேண்டும் என்கிறார் மருத்துவர். புற்றுநோய் இல்லை என்று வந்த பிறகு இதை ஏன் ஆபரேஷன் செய்ய வேண்டும்? ஆபரேஷன் செய்யாமலேயே காலந்தள்ள முடியாதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.
முதலில் உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கட்டியின் அளவு தெரிய வேண்டும். மற்றவர்கள் பார்க்கும்போதே அது அவர்களுக்குத் தெரிந்து, கட்டி பற்றி விசாரிக்கிறார்கள் என்றால் அது ஓரளவு பெரியதுதான். அப்படி அடுத்தவர்கள் விசாரிக்கும் அளவுக்கான கட்டி என்றால் அதை ஆபரேஷன் செய்து எடுத்துவிடுவதுதான் சிறந்தது.