Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் மாம்பழம், பப்பாளிப்பழம் சாப்பிடலாமா?|Can Preganant lady eat mango, papaya?

Share

அடுத்தபடியாக தவிர்க்க வேண்டிய பழம் அன்னாசி. இதில் புரோமெலின் ( bromelain  ) என்கிற என்ஸைம் மிக அதிக அளவில் இருப்பதால் இதுவும் கர்ப்பப்பை சுருங்குவதைத் தூணடக்கூடியது.  கர்ப்ப காலத்தில் மிகக்குறைந்த அளவு ஃப்ரெஷ் அன்னாசிப்பழத் துண்டுகளை சாப்பிடுவதில் தவறில்லை. அது அளவை மிஞ்சாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மூன்றாவதாக திராட்சை….. திராட்சைப்பழங்களில் என்ன பிரச்னை என சிலர் யோசிக்கலாம். கர்ப்பகாலத்தில் அளவோடு இவற்றைச் சாப்பிடலாம். ஆனால் திராட்சை விளைவிக்கப்படும்போது சேர்க்கப்படுகிற பூச்சிக்கொல்லிகள்தான் பிரச்னையே… அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். திராட்சை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற நிலையில் அவற்றை முறையாகக் கழுவிச் சாப்பிட வேண்டியது முக்கியம்.

இனிப்பு குறைவான பழங்களை சாப்பிடுங்கள்!

இனிப்பு குறைவான பழங்களை சாப்பிடுங்கள்!

அதிக இனிப்புள்ள பழங்களைத் தவிர்ப்பது அல்லது அளவைக் குறைத்து உண்பதும் அவசியம். உதாரணத்துக்கு தர்பூசணி, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்றவை…. இவற்றிலுள்ள அதிகப்படியான இனிப்புச்சத்து, கர்ப்ப கால நீரிழிவைத் தூண்டவும், எடை அதிகரிக்கவும் காரணமாகலாம்.  எனவே கர்ப்ப காலத்தில் எந்தச் சத்தும் குறைந்துவிடாதபடி சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். அவற்றில் பழங்களும் இடம்பெற வேண்டும். அப்படி நீங்கள் சேர்த்துக்கொள்ளும் பழங்கள் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், நார்ச்சத்து நிறைந்த, இனிப்பு குறைவானவையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆப்பிள், மாதுளை, அவகாடோ, ஆரஞ்சு, கிவி, கொய்யா போன்ற பழங்களை பயமின்றி சாப்பிடலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com