Doctor Vikatan: எனக்கு 27 வயதாகிறது. 4 மாத கர்ப்பிணி. திடீரென எனக்கு ப்ளீடிங் ஆனது. கரு கலைந்துவிட்டதாக நினைத்து மருத்துவரை அணுகினேன். அவர் ஊசி போட்டு ஓய்வெடுக்கச் சொன்னார். இருந்தாலும் கருவிலுள்ள குழந்தை பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலை அதிகமாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆக என்ன காரணம்…. அதற்குத் தீர்வு என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படக்கூடாது என்பதை அறிவோம். ஆனால் சில பெண்களுக்கு அரிதாக அப்படி ப்ளீடிங் ஆவதுண்டு. கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.