Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் இருவருக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது உண்மையா? | doctor vikatan – Is it true that both should eat together during pregnancy

Share

Doctor Vikatan: நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்தக் காலத்தில் வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடச் சொல்லி வீட்டில் எல்லோரும் வற்புறுத்துகிறார்கள். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்கிறார்கள். அது உண்மையா? கர்ப்ப காலத்தில் எத்தனை கிலோ எடை கூட வேண்டும்? எடை குறைவாக இருப்பது பிரச்னையா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்பிணிகள் குழந்தைக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற ஒன்றுதான். இருவருக்குச் சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையில் அளவுக்கதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் 1,800 கலோரிகள் சாப்பிட்டாலே போதுமானது. அதைத் தாண்டி கூடுதலாக நீங்கள் எதையும் சாப்பிடத் தேவையில்லை. அதாவது நீங்கள் ஏற்கெனவே என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்களோ, அதையே இந்த மூன்று மாதங்களில் சாப்பிட்டால் போதுமானது.

சிலருக்கு கர்ப்ப காலத்தில் வாந்தி, தலைச்சுற்றல் அதிகமாக இருக்கும். அதனால் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். எனவே அப்படி இருந்தால் தேவையான ஊட்டச்சத்துகள் உடலில் சேர்கின்றனவா என்பதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com