மிகவும் வயதானவர்களுக்கும், அதீத ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் உண்டு. அசௌகர்யத்தையோ, அறிகுறிகளையோ உணர்ந்தால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அது ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்ததன் காரணமாக ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கா அல்லது ஸ்பான்ட்டேனியஸ் கரோனரி ஆர்ட்டரி டிஸ்ஸெக்ஷன் பாதிப்பால் ஏற்பட்டதா என்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார். உங்கள் தோழிக்கு மேற்குறிப்பிட்டவற்றில் ஏதேனும் ஒரு ரிஸ்க் இருந்திருக்கலாம்.
பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து ஆஞ்சியோகிராம் செய்வது முதல், மருந்து, மாத்திரைக்ள பரிந்துரைப்பது வரை எந்தச் சிகிச்சை அவசியம் என்பதையும் மருத்துவர் முடிவு செய்வார். பெரும்பாலும் இந்தப் பிரச்னை கருவிலுள்ள குழந்தையை பாதிக்க வாய்ப்பில்லை என்பதால் அது குறித்து தேவையற்ற பயம் கொள்ள வேண்டாம்.
உங்கள் தோழிக்கு நிகழ்ந்தது அரிதான பிரச்னை. அதை நினைத்து உங்களுக்கும் அப்படி வருமோ என பயப்படத் தேவையில்லை. கர்ப்ப காலத்தை ஸ்ட்ரெஸ், பயமின்றி நிம்மதியாக அனுபவியுங்கள். தேவையான பரிசோதனைகளைச் செய்யத் தவறாதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.