Doctor Vikatan: கருத்தரிப்பதை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டி? | Doctor Vikatan: Does fibroid tumor affect fertility?

Share

Doctor Vikatan: என் வயது 30. தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. எனக்கு ஃபைப்ராய்டு கட்டி இருப்பதாகச் சொல்கிறார் மருத்துவர். இந்தக் கட்டி, கருத்தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா… இதற்கு என்ன தீர்வு?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

ஃபைப்ராய்டு என்பது, கர்ப்பப்பை தசைகளில் வரக்கூடிய ஒரு வகை கட்டி. அந்தக் கட்டியானது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்துதான், அது கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா, ஏற்படுத்தாதா என்று சொல்ல முடியும்.

ஒருவேளை இந்தக் கட்டியானது, கர்ப்பப்பையின் உள்ளே உள்ள எண்டோமெட்ரியம் எனப்படும் சவ்வுப் பகுதியில் இருந்தால் கண்டிப்பாக குழந்தை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் அந்த எண்டோமெட்ரியம் பகுதியில்தான் கருவானது பதியும்.

கட்டி இருக்கும் பட்சத்தில் கரு அங்கே பதிவதிலேயே பிரச்னை இருக்கும். இதுபோன்ற கட்டியை மருத்துவ மொழியில் “சப்மியூகோசல் ஃபைப்ராய்டு’ (Submucosal fibroid) என்று சொல்வோம். இதுபோன்ற கட்டியை அவசியம் நீக்கியாக வேண்டும். ஹிஸ்ட்ரோஸ்கோப்பி எனப்படும் சிகிச்சை மூலம் இதை நீக்கிவிடலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com