தொடர்ந்து நைட் ஷிஃப்ட் வேலையில் இருப்போருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல்கள் வருவதாகவும், எண்டோமெட்ரியாசிஸ் போன்ற பிரச்னை ஏற்படுவதாகவும், குழந்தையின்மைக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வர வாய்ப்புள்ளதாகவும், கருத்தரித்தாலும் கரு கலைய வாய்ப்புள்ளதாகவும், குறைப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதாகவும், எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
ஒரு சிலருக்கு நைட் ஷிஃப்ட் பணியை, உடல் ஏற்றுக்கொள்ளும். ஒரு சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதீத களைப்பு, டிப்ரெஷன், பதற்றம் போன்றவை இருக்கலாம். எனவே, இரவுநேர வேலை ஏற்றுக்கொள்ளாதவர்கள், பகல் நேர வேலைக்கு மாறிக்கொள்வதே சிறந்தது.
தொடர்ந்து பல நாள்களாக நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வோருக்கு ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்ட்டிசால் அளவு உடலில் அதிகரிக்கும். அதனால் வீக்கம், எண்டோமெட்ரியாசிஸ் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். இவையும் குழந்தையின்மைக்கு காரணமாகலாம். எனவே, உங்கள் உடலின் தன்மை, நைட் ஷிஃப்ட் வேலையால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு முடிவெடுங்கள்.