Doctor Vikatan: கடைகளில் கிடைக்கும் டியூப் மருந்து கண் வலிக்கு நிவாரணம் தருமா? | Doctor Vikatan: Does tube medicine relieve eye pain?

Share

கண்களில் ஏற்படும் தொற்று என்பது பாக்டீரியாவினாலும் வரலாம், வைரஸாலும் வரலாம். எனவே கண்களில் சிவப்பு, அரிப்பு, தொற்று என எந்தப் பிரச்னை வந்தாலும் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது. வைரஸால் ஏற்பட்ட இன்ஃபெக்ஷனுக்கு பாக்டீரியாவுக்கான மருந்தைப் பயன்படுத்தினால் தொற்றின் தீவிரம் இன்னும் மோசமாகுமே தவிர குணமாகாது.

எனவே அந்தப் பிரச்னைக்கு ஆன்டிவைரல் மருந்து தேவையா, ஸ்டீராய்டு மருந்து தேவையா என்பதை மருத்துவரால்தான் முடிவு செய்ய முடியும். சமீப காலங்களில் கண்களில் வரும் தொற்று விதம் விதமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

முன்பெல்லாம் மெட்ராஸ் தொற்றானது இரண்டு, மூன்று நாள்களில் குணமாகிவிடும். ஆனால் இப்போது வரும் தொற்றானது இரண்டு வாரங்கள் வரைகூட நீடிக்கிறது.

எனவே கண்கள் விஷயத்தில் துளியும் அலட்சியம் வேண்டாம். மருத்துவரைப் பார்க்க அலுப்புப்பட்டுக் கொண்டு கடைகளில் கிடைக்கும் டியூப் மருந்தை வாங்கிக் கண்களில் விட்டுக்கொள்ளாதீர்கள். அது ஆபத்தானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com