நம்மில் யாரும் மூளையை 100 சதவிகிதம் உபயோகிப்பதில்லை என்பதுதான் நிஜம். 30 முதல் 40 சதவிகிதம்தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். எவ்வளவு பெரிய விஞ்ஞானி, அறிவாளியாக இருந்தாலும் அவர்களும் மூளையை 100 சதவிகிதம் உபயோகித்திருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் 50 முதல் 60 சதவிகிதம் மட்டுமே உபயோகிப்பார்கள். மூளைக்கு முழுமையாக வேலை கொடுத்தால்தான் அது முழு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

அதற்கு, பாசிட்டிவ் சிந்தனை, ஆரோக்கிய உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, அதிக இனிப்பு, உப்பு தவிர்த்தல், யோகா போன்றவையே போதுமானது. ஒருவருக்கு மூளையின் செயல்திறன் 60 சதவிகிதமாக இருக்கும் நிலையில், முழுமையாகப் பயன்படுத்தாமல், 20 சதவிகிதம் குறைகிறது என வைத்துக்கொள்வோம். அதாவது, 40 சதவிகிதம் என்கிற நிலைக்குச் செல்லும்போது, மறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும். மூளைக்குப் போதுமான வேலை கொடுத்து 60 சதவிகித செயல்திறனுக்குக் குறையாத வகையில் தக்கவைத்துக் கொண்டாலும் அல்லது அதற்கும் கூடுதலாக செயல்திறனை உயர்த்திக் கொண்டாலும் மறதி பாதிப்பு ஏற்படாமல் சமாளிக்க முடியும்.