பெண்களுக்கு 26 முதல் 35 நாள் சுழற்சியில் மாதவிலக்கு வரலாம். அது 5 நாள்கள் முதல் 7 நாள்கள்வரை நீடிக்கலாம். அது நபருக்கு நபர் வேறுபடும். எனவே வீட்டிலோ, விடுதிகளிலோ ஒன்றாக, கருத்து ஒருமித்து வாழும் பெண்களுக்கு இப்படி ஒரே நேரத்தில் பீரியட்ஸ் சுழற்சி வரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான சுவாசம், ஒரே மாதிரியான உணர்வுகள் போன்றவை சாத்தியம்.
உதாரணத்துக்கு, ஒரு கூட்டத்தில் பலர் ஒன்று சேர்ந்து பாடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர்கள் ஒரே மாதிரி, ஒரே ஸ்ருதியில், ஏற்ற, இறக்கத்துடன் பாடுவார்கள். அவர்களது இதயத்துடிப்பு ஒன்றுபோல இருக்கும்.
மற்றபடி ஒன்றாகக் கூடி வாழும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் மாதவிலக்கு சுழற்சி வருமா என்பது குறித்து இன்னும் ஆய்வுகள் தேவை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும்வரை இதை உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.