Doctor Vikatan: ஏசி குளிர்ச்சிக்குப் பழகிவிட்ட உடல்… குளிர்காலத்தில் ஏசி அறையில் உறங்குவது சரியா? | Is it ok to sleep in air-conditioned room in winter?

Share

மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குளிர்காலத்தில் அதிகம் தாக்கக்கூடும். வெளியிலுள்ள சூழலும் குளிர்ச்சியாக இருக்கும்நிலையில், தொண்டை வறட்சி, சரும வறட்சி, இருமல் போன்றவை அதிகமாகலாம். மழை மற்றும் குளிர்காலங்களில் ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவும்.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும். ஏசியால் சளி பிடிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.  முன்னரே குறிப்பிட்டபடி, ஏசியின் ஃபில்டர்களை சரியாகச் சுத்தப்படுத்தாத நிலையில், அவற்றில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைக் கிருமிகள் சேர்ந்து, அவற்றின் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

இன்ஃபுளுயன்சா - வைரஸ் காய்ச்சல்

இன்ஃபுளுயன்சா – வைரஸ் காய்ச்சல்

ஏசி உபயோகிக்கும்போதெல்லாம் அதிலிருந்து கிருமிகள் பரவி, அலர்ஜி பாதிப்புக்குள்ளாகும் தன்மை கொண்டவர்களுக்கு சளி பிடிக்கலாம்.  வெப்பநிலையில் திடீர் மாற்றம் காரணமாக சிலருக்கு சளி பிடிக்கலாம். இது ஏசி அறைக்குள் இருப்பதால் மட்டுமன்றி, வானிலை மாற்றத்தாலும் நிகழலாம். அதனால்தான் வானிலை மாறும்போது சிலருக்கு சளி பிடிப்பது, மூக்கிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வருவதைப் பார்க்கிறோம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com