சொத்தைப் பற்கள் இருந்தாலும், சொத்தையின் காரணமாக சீழ் கட்டியிருப்பது போன்றவற்றாலும் வாய் துர்நாற்றம் இருக்கலாம்.
பல் ஈறுகளில் சிலருக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். ஈறுகளிலிருந்து ரத்தம் கசியலாம். Gingivitis எனப்படும் ஈறு அழற்சியோ, Periodontitis எனப்படும் ஈறுநோயோ இருந்தாலும் வாய் துர்நாற்றம் இருக்கும்.
உங்களுக்கு உமிழ்நீர் சரியாகச் சுரக்கிறதா என்று கவனியுங்கள். உமிழ்நீர்தான் வாயிலுள்ள அழுக்கு, பாக்டீரியா கிருமிகள் போன்றவற்றை வெளியேற்றுவது. உமிழ்நீர் சுரக்காத `ஸெரஸ்டோமியா'( Xerostomia) பாதிப்பும் வாய்துர்நாற்றத்துக்கு ஒரு காரணம்.
எனவே, நீங்கள் பல் மருத்துவரை அணுகி, முழுமையான வாய் பரிசோதனையை மேற்கொண்டு, இந்த பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப அவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.’’