Doctor Vikatan: நான் பத்து வருடங்களாக தலைமுடிக்கு டை உபயோகித்து வருகிறேன். என்னுடைய பிரச்னையே, டை அடித்த அடுத்த வாரமே மீண்டும் முடி வெள்ளையாகிவிடுவதுதான். எத்தனை நாள்களுக்கொரு முறை டை அடிப்பது சரியானது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.
சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒருமுறை டை உபயோகிப்பதில் தவறில்லை. கெமிக்கலோ, இயற்கையானதோ…. எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும். எனவே டை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்துவிடுங்கள். அடுத்து சிறுநீர் கழிக்கும்போது டையினால் உடலுக்குள் சேர்ந்த நச்சு வெளியேறிவிடும்.
டை உபயோகிக்கும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நேரத்தில் தலையை அலசிவிட வேண்டும். தலைக்குக் குளிக்கும்போது வாயையும் கண்களையும் மூடிக்கொண்டு அலசவும்.