Doctor Vikatan: எனக்கு பிரசவமாகி 5 வருடங்களாகின்றன. இன்னும் பிரசவமான தழும்புகள் வயிற்றில் மறையாமல் இருக்கின்றன. அவற்றை நிரந்தரமாக நீக்க முடியுமா..? என்னுடைய தங்கைக்கு உடல் எடை குறைத்ததன் விளைவாக தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் தழும்புகள் இருக்கின்றன. அதையும் நீக்க முடியுமா?
பதில் சொல்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் மருத்துவருமான நித்யா ரங்கநாதன்.
முதலில் ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் தழும்புகள் ஏன் ஏற்படுகின்றன எனப் புரிந்துகொள்ளுங்கள். சருமமானது அளவுக்கு அதிகமாக விரிவடைவதால், அதன் எலாஸ்டிசிட்டி போய், தசைநார்கள் உடைவதாலேயே ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படுகின்றன.