Doctor Vikatan: உடல் முழுவதும் வியர்க்குரு… அதை விரட்டும் பவுடர் உபயோகிப்பது தீர்வாகுமா? | Doctor Vikatan: Sweating all over body… Is using powder to repel it the solution?

Share

Doctor Vikatan: என் வயது 35. ஒவ்வொரு வருடமும் வெயில் காலத்தில் வியர்க்குரு பாதிப்பால் தீவிர அவதிக்குள்ளாகிறேன். கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் வியர்க்குரு அதிகம் வருகிறது. பார்ப்பதற்கும் அசிங்கமாகத் தெரிவதுடன், அரிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. வியர்க்குருவை விரட்டும் பவுடர் போட்டாலும் மீண்டும் வியர்க்குரு வருகிறது. இதற்கொரு தீர்வு சொல்ல முடியுமா?

பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய்

 குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர்

குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர்

கோடை வெப்பத்தின் காரணமாக, அதிகமாக வியர்க்கிறது. அந்த வியர்வையானது சரியாக வெளியேறாமல், சருமத்தின் அடியில் தேங்கிவிடுவதாலேயே வியர்க்குரு வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் சின்னச் சின்னதாகப் பொரிப்பொரியாகத் தோன்றி, பிறகு அதில் அரிப்பு, எரிச்சல் சேர்ந்துகொள்ளும். சிலருக்கு காய்ச்சலும் வரலாம். வியர்க்குரு பாதிப்பானது சின்னக் குழந்தைகளுக்கு மிகவும் சகஜமாக வரக்கூடியது.

குழந்தைகளின் சருமம் முதிர்ச்சியடைந்திருக்காது. சருமத் துவாரங்கள் மிக நுண்ணியதாக இருக்கும். அதனால் வியர்வை எளிதில் தேங்கி வியர்க்குருவாக வெளிப்படுகிறது. அதிலும் குறிப்பாக அக்குள், இடுப்பு, முதுகு போன்ற பகுதிகளில் இது அதிகம் வருவதைப் பார்க்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com