ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை முதல்நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைத்துவிட்டால். மறுநாள் அது நன்கு ஊறி, ஜெல்லி போன்று மாறியிருக்கும். எடையை அதிகரிக்க நினைப்போர் கெட்டியான பாலில், ஊறவைத்த பாதாம் பிசினுடன் நாட்டுச் சர்க்கரையோ, தேனோ கலந்து குடிக்கலாம்.
அதுவே எடையைக் குறைக்க நினைப்பவர்கள், பாலுக்கு பதில் வெந்நீரில் பாதாம் பிசின் சேர்த்துக் குடிக்கலாம். அது வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்தும்.
அதன் மூலம் எடை குறையும். கர்ப்பப்பை, அடிவயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும் அடிக்கடி பாதாம் பிசினை சேர்த்துக்கொள்ளலாம்.
பாதாம் பிசினில் துத்தநாகச் சத்து மிக அதிகம் என்பதால் ஆண், பெண் இருவருக்குமே மிகவும் நல்லது. ஆண்களுக்கு விந்தணு உற்பத்திக்கு மிகவும் நல்லது. விந்து நீர்த்துப்போகும் பிரச்னைக்கும் உதவும். பிரசவித்த பெண்களுக்கும் பாதாம் பிசின் நல்லது. எனவே அதை ஜூஸில், மில்க் ஷேக்கில் சேர்த்துக் கொடுக்கலாம். பாதாம் பிசினை உருட்டி அதில் இனிப்புகள் செய்து கொடுக்கலாம்.