Doctor Vikatan: என் மகளுக்கு 10 வயதாகிறது. அவளுக்கு எல்லா உணவுகளிலும் தயிர் இருந்தால் மட்டுமே சாப்பிடுவாள். இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள தயிர் கேட்பாள். உடல்நலம் சரியில்லாத போதும் தயிர்சாதம் கேட்டு அடம்பிடிப்பாள். தயிரை மோராக்கி, சூடு செய்து கொடுக்கலாம் என்கிறாள் என் தோழி. உடல்நலம் சரியில்லாதபோது தயிர், மோர் கொடுக்கலாமா? சூடு செய்து கொடுத்தால் பிரச்னை தராது என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
உங்கள் மகளுக்கு எல்லா உணவுகளுடனும் தயிர் கொடுப்பது நல்லதுதான். இட்லி, தோசை எந்த உணவுடனும் சைடிஷாக அதையும் தரலாமே தவிர, தயிர் மட்டுமே அவளது பிரதான உணவாக இருக்கக்கூடாது. அந்த விஷயத்தில் தெளிவாக, கவனமாக இருங்கள்.