Doctor Vikatan: உடற்பயிற்சி செய்யாமல் சப்ளிமென்ட் மூலம் எடையைக் குறைப்பது சரியானதா? | Doctor Vikatan: Is it right to lose weight with supplements without exercise?

Share

அவை எந்த மாதிரியான தாவரங்கள் என்பது அந்தப் பயிற்சியாளருக்கும் தெரியாது, சாப்பிடுவோருக்கும் தெரியாது. உடல் தசைகள் திரண்டு தெரியவும், சீக்கிரமே பலனை உணரவும் பலரும் இப்படிப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட தயாரிப்புகள் பலவற்றிலும் ஸ்டீராய்டு கலந்திருக்கும். அந்த ஸ்டீராய்டுகள் சீக்கிரமே தசைகளை உருண்டு, திரளச் செய்யும். இது பயங்கரமான பக்க விளைவுகளைக் கொடுக்கும். இந்த அளவு ஸ்டீராய்டை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்லீரலும் சிறுநீரகங்களும் பாதிக்கப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு மனநிலையில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்படும்.

சரிவிகித உணவு

சரிவிகித உணவு

புரதம் என்ற பெயரில் பரிந்துரைக்கப்படும் பவுடர்களும் இந்த ரகம்தான். பல வருடங்களாக இவற்றை எடுத்துக்கொள்ளும்போது உடலின் பிரதான உறுப்புகள் பாதிக்கப்படும். குழந்தையின்மை பிரச்னை வரலாம்.

எனவே வொர்க் அவுட் செய்வோர், சரிவிகித உணவு உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். 30 சதவிகிதம் புரதம், 30 சதவிகிதம் கார்போஹைட்ரேட் மற்றும் மீதமுள்ள சதவிகிதம் கொழுப்பு என எடுத்துக்கொள்வதுதான் சரியானது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com