Doctor Vikatan: உடற்பயிற்சியின் போது வலி சாதாரணமானதா, கவனம் தேவையா, எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? | Doctor Vikatan: pain during exercise is normal or need attention?

Share

அதுவே வலி என்பது வேறு. உடற்பயிற்சி என்றில்லை, வேறு ஏதேனும் வேலை செய்யும்போதும் உங்கள் உடல் பொசிஷன் சரியாக இல்லாவிட்டாலோ, அடிபட்டாலோ ஏற்படுவதுதான் வலி. அதை உடனடியாக உணர்வீர்கள். உடனே போகவும் போகாது. அதுவே சோர்னெஸ் என்பது உடனே போய்விடும். வலியாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பகுதியைப் பயன்படுத்தி வேறு எந்த வேலை செய்தாலும் உங்களுக்கு வலி இருக்கும். வலி என்பது சரியான அறிகுறியல்ல. எனவே வலி இருந்தால் வொர்க் அவுட் செய்வதைத் தவிர்த்து ஓய்வெடுப்பதுதான் சரியானது.

பொதுவாகவே வொர்க் அவுட் செய்யத் தொடங்கும் முன் ஃபிட்னெஸ் ஆலோசகர் அல்லது மருத்துவரைச் சந்தித்து உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளைச் சொல்லி, உங்களுக்கேற்ற வொர்க் அவுட் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். தவிர, வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்த பிறகும் சரியான சாப்பாடும் முறையான தூக்கமும் முக்கியம். முதல்நாள் சரியாகச் சாப்பிடாவிட்டாலோ, சரியாகத் தூங்காவிட்டாலோ, சரியாக ஓய்வெடுக்காவிட்டாலோ மறுநாள் வொர்க் அவுட் செய்யவே கூடாது. அது உங்கள் வலியை மேலும் அதிகரிக்கும்.

அதேபோல நெஞ்சுவலி, மாரடைப்புக்கான அறிகுறியெல்லாம் திடீரென ஒருநாளில் வருவதில்லை. பல நாள்களாக நீங்கள் சரியான சாப்பாடு, போதுமான தூக்கம் மற்றும் ஓய்வின்றி, கடுமையாக உ்டற்பயிற்சி செய்தால் ஒருநாள் அது உங்கள் உடலில் அறிகுறிகளைக் காட்டும். மற்றபடி எந்த வலியாக இருந்தாலும் அத்துடன் உடற்பயிற்சி செய்யாமல், அது சரியான பிறகு தொடர்வதுதான் பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com