Doctor Vikatan: இரவு உணவுக்கு பழங்களும் சூப்பும் எடுத்துக் கொள்வது எடைக்குறைப்புக்கு உதவுமா?|doctor vikatan – Does having fruit and soup for dinner help with weight loss

Share

சூப்பும் பழங்களும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள். எனவே, நள்ளிரவில் ஏற்படும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தவும், தூக்கம் பாதிக்கப்படாமலும் இருக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. அதிலும் குறிப்பாக, நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தால், இரவில் சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள், அதை அந்த நாள் முழுவதும் எப்படி எரிக்கிறீர்கள், அதிலும் பசி உணர்வு இல்லாமல் என்பது தான் முக்கியம். அதுதான் எடைக்குறைப்புக்கும் உதவும்.

எனவே, எடைக்குறைப்பு முயற்சியைத் தொடங்கும் முன் சரியான நிபுணரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையோடு உங்களுக்கான உணவுத்திட்டத்தைக் கேட்டறிந்து பின்பற்றுவதுதான் சரி.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com