2 வயதுடைய குழந்தைக்கு தோராயமாக 50 வார்த்தைகளையாவது, அர்த்தத்துடன் பேசத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்து சிறு சிறு வாக்கியங்களை அமைத்துப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கு குறைவாகப் பேசினால், பேச்சுத்திறனில் குறைபாடு (speech delay) இருப்பதாக அர்த்தம். மேலும் இரண்டு வயதுள்ள குழந்தை, மாடிப்படிகளில் ஏறி, இறங்கும் அளவுக்கு நன்றாக நடக்கவும் ஆரம்பித்திருக்க வேண்டும். புத்தகத்தின் பக்கங்களை விரல்களால் ஒவ்வொன்றாகப் புரட்டத் தெரிந்திருக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடப் பழகியிருக்க வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு குழந்தைகளுக்கும் வயதுக்கேற்ற பேச்சுத்திறன் வளர்ச்சி இல்லை என்றே தெரிகிறது. தவிர, மற்ற வளர்ச்சிப் படிநிலைகளும் பின்தங்கி இருப்பதாகவே தெரிகிறது.
எனவே, உடனடியாக குழந்தைகள்நல மருத்துவரிடம் காட்டி, காரணங்களைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை எடுப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.