Doctor Vikatan: இரண்டு சிறுநீரகங்களும் பழுதான நிலையில், சித்த மருத்துவம் தீர்வு தருமா? | Doctor Vikatan: both kidneys are damaged… Siddha medicine will help?

Share

உங்களுடைய பிரச்னைக்காக நீங்கள் அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், கூடவே நீங்கள் மூக்கிரட்டைக் கீரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மூக்கிரட்டைக் கீரையை கஷாயமாக வைத்துக் குடிக்கலாம் அல்லது அதைக் காயவைத்துப் பொடித்து, தினமும் இருவேளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது கிட்னி ஸ்டோன்களை கரைக்கக்கூடியது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியது. ஒட்டுமொத்த உடலுக்குமே புத்துணர்வு அளிக்கக்கூடிய கீரை இது.

சிறுநீரக நோயாளிகளுக்கு சத்துகளை உட்கிரகிப்பதில் பிரச்னை இருப்பதால், ரத்தச்சோகை பாதிப்பு வரும். மூக்கிரட்டைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சத்துகள் உட்கிரகிக்கப்படுவதும் மேம்படும். ரத்த அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

மூக்கிரட்டை!

மூக்கிரட்டை!

எனவே நீங்கள் உங்கள் விருப்பப்படி முதலில் சித்த மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். அதுவரை அலோபதி மருந்துகளுடன் சேர்த்து மூக்கிரட்டை கீரையையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com