Doctor Vikatan: எனக்கு முதல் பிரசவம் சிசேரியன்… ஆண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பாலுடன் வேறு எந்த மாதிரியான உணவுகளை இணை உணவுகளாகக் கொடுக்கலாம்?
Milo Kiru, விகடன் இணையத்திலிருந்து.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.
தாய்ப்பால் தவிர்த்து, கீழ்க்காணும் உணவுகளையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். முதல் உணவு சாதமாக இருக்கட்டும். எந்த சாதம் என்றாலும் ஓகே.
இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட தானியங்கள் (அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்றவை)
தோல் நீக்கி, கூழாக்கி, வடிகட்டப்பட்ட பழங்கள் (வாழைப்பழம், பேரிக்காய், ஆப்பிள் மற்றும் பீச் போன்றவை)
சர்க்கரை சேர்க்காத, வடிகட்டிய ஜூஸ் (ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி)
தோல் நீக்கி வேக வைத்து, மசிக்கப்பட்ட காய்கறிகள் ( கேரட், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, காலிஃபிளவர், பசலைக்கீரை, சுரைக்காய் போன்றவை)
சிறிய அளவு தயிர் அல்லது யோகர்ட் போன்றவ.