Doctor Vikatan: அந்தரங்கப் பகுதியில் அதீத வறட்சி… குணப்படுத்த வழிகள் உண்டா? | Doctor Vikatan: Extreme dryness in private area… are there ways to cure it?

Share

மருத்துவரை அணுகி, உங்களுக்கேற்ற வெஜைனல் லூப்ரிகன்ட் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்கலாம். முகத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுபோலத்தான், வெஜைனா பகுதிக்கு லூப்ரிகன்ட் உபயோகிப்பதும். இந்த லூப்ரிகன்ட்டுகள் பிறப்புறுப்புப் பகுதியை வறண்டுபோகாமல் வைத்திருக்கும். பூப்பெய்தியதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இதை உபயோகிக்கலாம். தினமும் இருமுறை உபயோகிக்கலாம்.

வெஜைனா பகுதியின் ஆரோக்கியம் என்பது மிகமிக முக்கியமானது. பல பெண்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல், சோப் உபயோகித்து அந்தப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள். அப்படிச் செய்வதால் அந்தப் பகுதியின் இயற்கையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, இன்ஃபெக்ஷன் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்ஃபெக்ஷனை தடுக்கிறேன் என்ற பெயரில் வெஜைனா பகுதியில் கிருமி நாசினிகளை உபயோகிப்பார்கள். உப்புத் தண்ணீரில் கழுவுவார்கள். இதெல்லாம் அந்தப் பகுதியின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கும்.

வறட்சியைப் போக்க சிலர் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கிறார்கள். அதுவும் தவறு. அதீத சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, உள்ளாடைகளை கிருமிநாசினி கொண்டு துவைப்பதெல்லாம் கூடாது. குளித்து முடித்ததும், கழிவறை பயன்படுத்தி முடித்ததும் அந்தரங்க உறுப்புகளின் ஈரம்போகத் துடைத்துவிட்டுதான் உள்ளாடைகளை அணிய வேண்டும். தளர்வான உள்ளாடைகளாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com