Doctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்… தவிர்க்க என்ன வழி? | Doctor Vikatan: What is the way to avoid frequent anger?

Share

Doctor Vikatan: என் வயது 56. எனக்கு அடிக்கடி கோபம்  வருகிறது.  இதனால் பல உறவுகளை  இழந்திருக்கிறேன். தவிர என்னுடைய இந்தக் குணத்தால் பலரும்  என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்.  ஒருநாளைக்கு 10 முறைக்கு மேல் டென்ஷன் ஆகிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. ஆனாலும் என்னுடைய இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள என்னதான் வழி?

– அப்துல் ரஷீத், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

இந்த வயதில் கோபம் வருவது இயல்பானதுதான். “40 வயதில் நாய் குணம்’ என ஒரு பழமொழியே இருக்கிறது. 56 வயதில் உடல் பலவீனமடையத் தொடங்கும். டெஸ்டோஸ்டீரான் என்ற ஆண் ஹார்மோன் சுரப்பது குறையத் தொடங்கும். அதன் விளைவாக உடல் ஆற்றலோடு சேர்த்து, தாங்கும் திறன், பொறுமை எல்லாமும்  குறையத் தொடங்கும்.

இந்த வயதில் பெரும்பாலும் குடும்ப பொறுப்புகளை முடித்திருப்பீர்கள். அதுநாள்வரை உங்களைச் சுற்றியே குடும்பம் இயங்கியிருக்கும். இப்போது அந்த மதிப்பு சற்று குறையத் தொடங்கியிருக்கும். பிள்ளைகள் தனித்துவமாக முடிவெடுக்க ஆரம்பித்திருப்பார்கள்.  உங்களிடம் குறை கண்டுபிடிக்கும் குணம்தான் மற்றவர்களிடம் மேலோங்கி இருக்கும். எல்லா இயலாமையும் சேர்ந்து கோபமாக வெடிக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com