வறட்டு இருமலுக்கு பாதாம் பிசினை சிறிது எடுத்து வாயில் அடக்கிக் கொள்ளலாம். பாதாம் பிசின் பொடி, கருவேலம் பிசின், கோதுமை மாவு தலா 4 கிராம் எடுத்து, 12 கிராம் வெல்லம் சேர்த்து இருமல் மற்றும் கழிச்சலை நிறுத்தும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
சித்த மருத்துவத்தில் மருந்துக் கலவையாக பல்வேறு வகைகளில் உபயோகப்படுகிறது. ஆனால் தனித்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தும்போது அளவோடு தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக உடல் சூட்டைக் குறைக்க உதவும். மற்ற பான வகைகளில் சேர்த்து ஸ்மூத்தி போல தயாரிக்கலாம்.
கோடைக்காலங்களில் தயாரிக்கப்படும் பாரம்பர்ய பானங்களில் இதைச் சேர்க்க, கூடுதல் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் கொடுக்கும். மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டாவில் பாதாம் பிசின் தவிர்க்க முடியாத சேர்க்கை. வட நாட்டில் தயாரிக்கப்படும் பல இனிப்பு வகைகளில் பாதாம் பிசின் நீக்கமற இடம்பிடித்து சுவை கூட்டுகிறது. நாம் பயன்படுத்தும் உணவு வகைகளில் தேவைக்கேற்ப அளவோடு சேர்த்துக்கொள்ளலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.