Doctor Vikatan: அடிக்கடி நகச்சுற்று பாதிப்பு… காரணமும் தீர்வுகளும் என்ன? | doctor vikatan – Commonly Affected Toenails… What are the Causes and Solutions

Share

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு `பாரோநைக்கியா’ (Paronychia) என்று பெயர். அதாவது, நகங்களில் ஏற்படும் ஒருவகையான அழற்சி பாதிப்பு இது. நகங்களில் ஏற்படும் திடீர் புற அதிர்ச்சி, தொற்று அல்லது எரிச்சல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.

இந்த பாதிப்பானது கை மற்றும் கால் விரல் நகங்களில் வரலாம். இதன் தீவிரமானது கடுமையாகவோ, நாள்பட்ட பாதிப்பாகவோ இருக்கலாம். முதல் வகை பாதிப்பானது திடீரென நகங்களைச் சுற்றி ஏற்படும் பாதிப்பு. 6 வாரங்களுக்கு மேலும், தொடர்ந்தால் நாள்பட்ட பாதிப்பக் கணக்கிடப்படும்.

நகங்களைச் சுற்றியுள்ள சருமத்தில் லேசான கீறலோ, வெட்டோ இருக்கும்போது அதன் வழியே பாக்டீரியா கிருமி உள்புகுந்து பெருகுவதால்தான் பாதிப்பு தீவிரமாகிறது. நகங்களின் அடிப்பாகத்தில் உள்ள பகுதிக்கு `கியூட்டிகிள்’ என்று பெயர். அந்த இடத்திலோ, நகமும் சதையும் இணையும் இடத்திலோ தொற்று ஏற்பட்டால் இந்த பாதிப்பு வரலாம்.

 நகம் பராமரிப்பு

நகம் பராமரிப்பு

இந்த பாதிப்புக்கு காரணம் `ஸ்டெஃபைலோகாக்கஸ் ஏரியஸ்’

( Staphylococcus aureus) என்ற பாக்டீரியா. சருமத்தில் ஏற்படும் காயம், சருமத்தின் உள்பகுதியிலிருந்து வளரும் நகம், எங்கேயாவது திடீரென இடித்துக்கொள்வதால் ஏற்படும் அதிர்ச்சி, அடிக்கடி மெனிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வது, கடுமையான டிடெர்ஜென்ட் போன்றவற்றைத் தொட்டுக்கொண்டே இருப்பது, நகங்களைக் கடிக்கும் பழக்கம், அடிக்கடி தண்ணீரில் கைவைப்பது, நீரிழிவு போன்றவை இதற்கான காரணங்கள்.

நகங்களில் வலி, வீக்கம், தொட்டால் வலி அதிகரிப்பது, நகத்தைச் சுற்றி சீழ்வைப்பது போன்றவை இதன் அறிகுறிகள். கவனிக்காமல் விட்டால் நகம் அசாதாரணமாகவும் நிறம் மாறியும் வளர வாய்ப்புகள் உண்டு. நகங்களில் கோடுகள் விழலாம், வறண்டு போகலாம், ஒரு கட்டத்தில் நகமே விழவும் வாய்ப்புகள் உண்டு.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com