Doctor Vikatan: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்…. பல்லி எச்சம்தான் காரணமா…. தவிர்க்க முடியுமா?|How to avoid sores in lips?

Share

‘ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ்’  தொற்றானது சிறு சிறு கொப்புளங்களையும் புண்களையும் ஏற்படுத்தும். வலியும் இருக்கும்.  இந்தத் தொற்றில் இருவகை உண்டு. ஒரு வகை தொற்றில் வாய் மற்றும் உதட்டுப் பகுதியைச் சுற்றி கொப்புளங்கள் வரும்.  இன்னொரு வகை தொற்றில் அந்தரங்க உறுப்பில் புண்கள், கொப்புளங்கள் வரும். 

டீ கிளாஸ் மூலம் பரவலாம்

டீ கிளாஸ் மூலம் பரவலாம்
Pixabay

நீங்கள் குறிப்பிட்டுள்ள உதட்டுப் பகுதி கொப்புளங்கள், சரியாகக் கழுவப்படாத டீ கிளாஸில் மற்றவரும் டீ குடிப்பது, தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் எளிதில் பரவும்.  இந்தத் தொற்று உள்ளவர்கள் மற்றவர்களை முத்தமிடுவதன் மூலமும் இது மற்றவருக்குப் பரவும்.

சிலவகை வைரஸ் தொற்றுகள் வரும்போதும் இந்த பாதிப்பு வரலாம். சிலவகை மருந்துகளின் பக்கவிளைவாலும் வாய் மற்றும் உதடுகளைச் சுற்றி கொப்புளங்கள் வரலாம். அப்படி வரும்போது மருத்துவ ஆலோசனையோடு ஆயின்மென்ட் உபயோகித்தாலே சரியாகிவிடும். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com