Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் எனப்படும் தோள்பட்டை வலி…. மீள வழிகள் உண்டா? | Doctor Vikatan: are there ways to recover from Shoulder pain?

Share

இந்த பாதிப்பு தானாக சரியாக, குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 வருடங்கள்கூட ஆகலாம். அதுவரை அவ்வப்போது பிசியோதெரபி செய்ய வேண்டும். ஒரு வாரமோ, பத்து நாள்களோ செய்துவிட்டு, பலன் தெரியவில்லை என நிறுத்தக்கூடாது.

பிசியோதெரபிஸ்ட்டிடம் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டிலேயே செய்து வரலாம். தொடர்ச்சியாகச் செய்யாவிட்டாலோ, தவறாகச் செய்தாலோ, தோள்பட்டையில் இருந்து வலியானது கழுத்துக்கும் பரவலாம். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை பொறுமை மிக அவசியம்.

தோள்பட்டை வலி

தோள்பட்டை வலி

‘மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ வலியைப் பொறுத்துக் கொள்வதெல்லாம் என்னால் முடியாது… இது என் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது’ என நினைப்போருக்கு ‘கீஹோல் அறுவை சிகிச்சை’ தீர்வளிக்கும்.

இந்த அறுவை சிகிச்சையின் மூலம் தோள்பட்டைப் பகுதியில் இறுகிப்போன ஜவ்வுகள் தளர்த்திவிடப்படும். அதனால் பாதிப்பில் இருந்து மீளும் காலத்தை துரிதப்படுத்தலாம். அதாவது கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பிசியோதெரபி செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள், இந்தச் சிகிச்சையின் மூலம் சில வாரங்களில் வலியிலிருந்து மீளலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com