Doctor Vikatan: என் வயது 74. நான் சர்க்கரை நோய்க்கு தினமும் காலையில் கிளைகோமெட் (Glycomet -gp) 0.5 மாத்திரை ஒன்றும், ஸிங்கோவிட் (Zincovit) மல்டி வைட்டமின் மாத்திரை ஒன்றும், இரவு Aztor 10 என்ற மாத்திரையும், காலையில் ஒரு Thyronorm மாத்திரை ஒன்றும் கடந்த 9 வருடங்களாக சாப்பிடுகிறேன். இரவு சாப்பிடும் அஸ்ட்டோர் மட்டும் 2019-ம் ஆண்டு முதல் சாப்பிடுகிறேன்.
இப்போது இரண்டு மாதங்களாக நடக்கும்போது கொஞ்சம் மூச்சு இரைக்கிறது (500 மீட்டர் தூரம் நடந்தாலே). இரண்டு மாதங்களில் 3 முறை, இரவில் நெஞ்சில் வலி வந்து கொஞ்சம் நேரம் இருந்து குறைந்தது. எனக்கு எப்போதும் இடது புறம் திரும்பிப் படுக்கும் பழக்கம் உள்ளது. 2 மாதங்களில் சில நாள்களில் எனது இதயத்துடிப்பு என் காதில் ( இடது ) நன்கு துல்லியமாகக் கேட்கிறது.
எனக்கு என்ன பிரச்னை? நான் தனியாக வசிப்பதால் முதலுதவியாக வேறு ஏதேனும் மாத்திரை எடுக்க வேண்டுமா?
– Lakshmi Arumugam, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவருமான சஃபி
நீங்கள், இப்போது சர்க்கரைநோய்க்கும் தைராய்டுக்கும், கொலஸ்ட்ராலுக்கும் எடுத்து வருகிற மாத்திரைகள் உங்கள் வயதுக்கு ஏற்றவைதான்.
ஆனால், உங்களுக்கு இருக்கும் நோய்களுக்கு ஏற்ற மருந்துகளா அவை என்பது தெரியவில்லை. அதாவது உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதை நீங்கள் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.