இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியாகி, மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமலுடன், கவுண்டமணி, செந்தில், மனிஷா கொய்ராலா, ஊர்மிலா, சுகன்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும், படத்தின் பின்னணியும் இசை மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில், இந்தியனும் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.
Sita Ramam Movie Review : துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்பட விமர்சனம்
இந்த படத்தில் தவறு செய்த, லஞ்சம் வாங்கிய தனது மகனையே தந்தை கமல் கொன்றுவிடுவார். இந்தியன் படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், எமோஷன் என அனைத்து காட்சிகளும் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் படத்தின் 2-ஆம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதிலும். கமல் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் இடம்பெற்றுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக 2-ம் பாகத்தில் அனிருத் இசை அமைக்கிறார். தவிர்க்க முடியாத சில காரணங்களால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட காஜல் அகர்வால்
இந்நிலையில் செப்டம்பர் 13ஆம் தேதி இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என ஹீரோயின் காஜல் அகர்வால் தகவல் வெளியிட்டுள்ளார். விக்ரம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக கமல் விரைவில் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் ஷங்கர், ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கி வந்தார். தெலுங்கில் உருவாகி வந்த இந்தப் படம், அங்கு நடைபெற்று வரும் ஸ்ட்ரைக் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியன்2 படத்தை முதலில் முடித்துவிட ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியன் 2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் தேதி குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.