Dhoni : வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

Share

வருகிற ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என்பது பற்றி அதன் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.

2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்கவைத்துள் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரங்களை அறிவிக்க வரும் 31-ம் தேதியே கடைசி நாள்.

தோனி

இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சி.எஸ்.கே அணியில் முன்னாள் கேப்டன் தோனி தக்க வைக்கப்படுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கலந்துகொண்டபோது அவரிடம் தோனி இந்த சீசனில் விளையாடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

காசி விஸ்வநாதன்

அதற்கு பதிலளித்த அவர், “சி.எஸ்.கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசைதான். ஆனால் அது குறித்து இன்னும் தோனி எங்களிடம் உறுதிப்படுத்தவில்லை. ‘அக்டோபர் 31-ம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன்’ என்று தோனி சொல்லி இருக்கிறார். எங்களுக்கும் அவர் சி.எஸ்.கே-வில் ஆட வேண்டும் என்கிற ஆசையும், அவர் ஆடுவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.” என்று காசி விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com