deepak chahar as first choice in asia cup says l balaji / ஆசியக்கோப்பை அணியிலிருந்து ஆவேஷ் கானைத் தூக்கிட்டு இந்த வீரரை கொண்டு வாங்க

Share

ஆசியக் கோப்பை 2022 டி20 போட்டித் தொடரில் தீபக் சாஹர் ரிசர்வ் வீரராகத்தான் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் அவரை அணியில் எடுக்க முடியாது,  எனவே தீபக் சாஹரை ஆவேஷ் கானுக்குப் பதிலாக அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய பவுலரும் தமிழக அணியின் முன்னாள் பவுலருமான எல்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை அணியில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எல்.பாலாஜியும் ஆவேஷ் கானுக்குப் பதில் தீபக் சாஹரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.  காயமடைந்த தீபக் சாஹர் ஐபிஎல் 2022 முழுதையும் துறக்க வேண்டியதாயிற்று, அதன் பிறகான இந்திய அணியின் பல தொடர்களையும் இழந்தார் அவர். ஆனால் ஜிம்பாப்வே தொடருக்கு மீண்டும் வந்து கலக்கினார். இவர் ஒரு ஆல்ரவுண்டரும் கூட. மாறாக ஜிம்பாப்வே தொடரில் ஆவேஷ் கான் செம சாத்து வாங்கினார். அவரிடம் வேகம் இருந்தும் ஒன்றும் பயனில்லாமல் இருக்கிறது.

இந்நிலையில் எல்.பாலாஜி கூறியதாவது: “ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சாஹர் ரிசர்வ் வீரராக மட்டுமே அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை தவிர்த்து புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் மட்டுமே அணியில் இடம் பிடித்துள்ளனர். என்னை பொறுத்தவரை ஆவேஷ் கானை விட தீபக் சாகர் பந்துவீச்சில் சிறந்தவர்.

ஏனெனில் தீபக் சாஹர் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக காயம் காரணமாக அவர் ஆறு மாதங்கள் விளையாட முடியாமல் போனது அவருக்கு பின்னடைவை தந்துள்ளது.

Also Read : 75 பந்துகளில் சதம்: கோலி, பாபர் அசாமைக் கடந்து புஜாரா அதிசய சாதனை

தீபக் சாகர் ஒரு கடினமான உழைப்பாளி அவருக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருந்து நிச்சயம் அந்த இடத்தை அவர் கெட்டியாக பிடித்துக் கொள்வார். அவரால் என்ன செய்ய முடியுமோ அதனை அணிக்காக எப்போதுமே செய்வார். மேலும் தற்போது அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறித்து அவர் பெரிதாக கவலை கொள்ளமாட்டார். நிச்சயம் அவர் மீண்டும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்.

துபாயில் நடைபெறும் போட்டிகளில் அவரை போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கஷ்டம். ஏனெனில் புதுப்பந்தில் இருபுறமும் அவரால் ஸ்விங் செய்ய முடியும்.

ஆகவே அவரைப்போன்ற வீரர்கள் அணிக்கு அவசியம் தேவை” என்று எல்.பாலாஜி கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 28ம் தேதி  நடைபெறுகிறது, உலகக்கோப்பையில் தோற்றதற்கு இந்திய அணி பழித்தீர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com