Deepak Chahar: "என் இதயம் எப்போதும் CSK-வுடன் தான்.." – தீபக் சஹாரின் மனைவி நெகிழ்ச்சி

Share

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ. 27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் போனது முதல் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், அஜின்கியா ரகானே உள்ளிட்ட பல வீரர்கள் அன்சோல்ட் ஆனது வரை பல திருப்பங்கள் நடந்தன.

தீபக் சஹார், தோனி

அந்த வரிசையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 சீசன்கள் விளையாடிய தீபக் சஹாரை சென்னை அணி ஏலம் எடுக்காமல் விட்டது, அவருக்கு மட்டுமல்ல அணியின் ரசிகர்களுக்குமே ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இத்தனைக்கும், ஏலத்துக்கு முன்பாக 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டபோது, சென்னை அணியில் தாம் தக்கவைக்கப்படாததை அறிந்த தீபக் சஹார், “சென்னை அணி என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன். கடைசியாக நடந்த மெகா ஏலத்துக்கு முன்பாகவும் சி.எஸ்.கே அணி என்னைத் தக்கவைக்கவில்லை. நான் மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியை அணிய விரும்புகிறேன். இல்லையென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் எனக்காக ஏலம் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார். தற்போது, தீபக் சஹாரை ரூ. 9.25 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்திருக்கிறது.

இந்த நிலையில், தீபக் சஹாரின் மனைவி ஜெயா, “மைதானத்தின் அரங்கத்தில் அணியை உற்சாகப்படுத்தியது முதல் உலகத்தின் முன் தீபக்கின் காதலை ஏற்றுக் களத்தில் கொண்டாடியது வரை என் இதயம் எப்போதும் இந்த அணியுடன் இணைந்திருக்கும். அற்புதமான இந்த நினைவுகளுக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” என இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு, தோனி, தீபக் சஹாருடன் தான் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

2018, 2021, 2023 ஆகிய சீசன்களில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதில் பவர்பிளே ஸ்பெசலிஸ்ட் பவுலராக ஜொலித்த தீபக் சஹார், சென்னை அணிக்காக 6 சீசன்களில் 76 ஆட்டங்களில் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவற்றையெல்லாம் விடவும், 2021-ல் துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் மேட்சின்போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஜெயாவிடம் தீபக் சஹார் தனது காதலை வெளிப்படுத்தி சர்ப்ரைஸ் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, 2022 ஜூனில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com