டெத் கஃபேக்கள் தேவையா?
மரணத்தை பற்றி பேசுவது அசெளகரிமாக இருந்தாலும் மரணம் ஒரு இயல்பான, இயற்கையான ஒன்று, அதை சுற்றியுள்ள பயத்தை குறைக்கும் நோக்கத்தை இந்த புதிய முயற்சி கொண்டுள்ளது.
இந்த உரையாடல்கள் மனநலத்தை மேம்படுத்துவதோடு, துக்கம், தனிமை, மனசோர்வு ஆகியவற்றை வெளிப்படுத்த ஒரு ஆதரவான சூழலை வழங்குகின்றனவாம்.
இந்த டெத் கஃபேக்கள் மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவோ, அல்லது தற்கொலையை ஆதரிப்பதற்காகவோ இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பலரும் இதனை தவறாக புரிந்து கொள்கின்றனர். இவை முற்றிலும் தன்னார்வமான, தத்துவம் அடிப்படையிலான வாய்ப்புகளை மட்டுமே இது வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.