DD Next Level; santhanam; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கோவிந்தா கோவிந்தா சர்ச்சையான நிலையில், அப்பாடலின் டியூனை படத் தயாரிப்பு நிறுவனம் மியூட் செய்திருக்கிறது

Share

நடிகர் சந்தானம் நடித்துள்ள “டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் (DD Next Level)’ திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இவ்வாறிருக்க, இப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலுக்கெதிராக ஒருதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இப்பாடல், வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

தனது மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல் வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.

அதோடு, மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த பாடலை நீக்கும்படி கூறாமல், “திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்று வழங்கப்பட்டுள்ளதால், சென்சார் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும்.

இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com