CWC: `சுயமரியாதை முக்கியம்; பெண் தொகுப்பாளரின் ஆதிக்கம்; வெளியேறுகிறேன்’ – மணிமேகலை வேதனை

Share

 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

குக் வித் கோமாளி 5-வது சீசன் இப்போது ஒளிபரப்பாக தொடங்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ‘குக் வித் கோமாளி’ 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை தற்போது இதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சுயமரியாதைதான் முக்கியம்’ என்றும் ‘இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார்’ என்றும் வேதனையுடன் பதிவிட்டிருக்கிறார்.

தொகுப்பாளர் மணிமேகலை

அப்பதிவில் மணிமேகலை, “இனி குக்வித் கோமாளி நான் பங்கேற்கப்போவதில்லை. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சி ஆரம்பாகி நடைபெற்று வருகிறது. நேர்மையுடனும், கடின உழைப்புடனும் எனது 100% உழைப்பைப் போட்டு இந்நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன். சுயமரியாதையை விட இங்கு எதுவும் பெரிதில்லை. பிரபலம், பணம், வாய்ப்புகள், தொழில் இவையெல்லாம் எனக்கு இரண்டாவது விஷயம்தான். சுயமரியாதைதான் எனக்கு முதன்மையானது. அது எனக்குக் கொடுக்கப்படாத இடத்தில் நான் இருக்கமாட்டேன். அதன் காரணமாகவே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிருந்து வெளியேறுகிறேன்.

இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் என் வேலையில் ஆதிக்கம் செலுத்தினார். அவர் குக் என்பதையே மறந்து, தொகுப்பாளரின் வேலைகளை செய்ய விடாமல், நிறைய குறுக்கீடுகளைச் செய்கிறார். இதுதொடர்பாக எனது உரிமையைக் கேட்பதும், எனக்காக நான் குரல் கொடுப்பதும் இந்நிகழ்ச்சியில் தவறாக மாற்றப்பட்டது. எனக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன். யாருக்காகவும் அதை நான் நிறுத்தமாட்டேன். இப்போது நடப்பது முன்பு இருந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியாக இல்லை. முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

2010-ம் ஆண்டு முதல் நான் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது 15 ஆண்டுகால இந்தப் பயணத்தில் இப்படியொரு முதிர்ச்சியற்ற நடத்தைகளை நான் பார்த்ததே இல்லை. இருப்பினும், எனக்கு இதைச் செய்த நபருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவருக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். வாழு, வாழ விடு.என்னை ஆதரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்” என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தைக் கொட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com