ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்களால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதை எப்படி தவிர்க்கலாம் என பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் உப்பு மற்றும் இதய நோய் பற்றி புதிய ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது. இதில் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உப்பின் அளவு மூலம் எப்படி குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மெடிக்கல் நியூஸ் டுடேயின் அறிக்கையின்படி, உப்புக்கும் இதய நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து சீனாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தினமும் 1 கிராம் உப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை 4% மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 6% வரை குறைக்கலாம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.

உலகிலேயே சீனாவில்தான் உப்பு நுகர்வு அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதனல்தான் சீனா இந்த ஆய்வை மும்மூரமாக மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு 1 கிராம் உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது உலகளவில் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தினமும் 2300 மில்லிகிராம் உப்பை உட்கொள்ள வேண்டும். இதை விட அதிகமானால் நோய்கள் ஏற்படலாம்.
இந்த 6 பிரச்சனை இருப்பவர்கள் நெய்யை தவறி கூட சாப்பிடாதீங்க… மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?
உப்பு கிட்டத்தட்ட அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். ரொட்டி, தின்பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளில் அதிக அளவு உப்பு உள்ளது. எனவே உப்பின் அளவை குறைக்க நினைத்தால் முதலில் நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முடிந்தவரை உணவில் உப்பை குறைக்க முயற்சி செய்யுங்கள். உப்பு இல்லாமல் சில காய்கறிகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இது தவிர, அவ்வப்போது உங்கள் உடல்நலப் பரிசோதனைகளையும் செய்துகொள்ளுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், மருத்துவரை அணுகி உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.