CSK : ருத்துராஜ் இல்லாத சிஎஸ்கே; ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்? – என்னென்ன மாற்றங்கள்?

Share

‘மாற்று வீரர் – டெவான் கான்வே?’

முதலில் ருத்துராஜ் இல்லாத இடத்தை யாரை வைத்து நிரப்ப முடியும் என்பதை பார்க்க வேண்டும். சிஎஸ்கே அணி அதற்கு பெரிதாக சிரமமெல்லாம் படத் தேவையில்லை. பெவிலியனில் டெவான் கான்வே இருக்கிறார். அவரை அந்த ஓப்பனிங் ஸ்லாட்டுக்குக் கொண்டு வந்துவிடலாம்.

ஆனால், கான்வே உள்ளே வரும்பட்சத்தில் அந்த 4 வெளிநாட்டு ஸ்லாட்களில் பிரச்னை வரும். இப்போதைக்கு சென்னை அணியின் லெவனில் ரச்சின் ரவீந்திரா, நூர் அஹமது, பதிரனா, ஓவர்டன்/ சாம் கரண் என 4 வீரர்கள் அந்த 4 ஸ்லாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். டெவான் கான்வே உள்ளே வர வேண்டுமெனில் அந்த நால்வரில் ஒருவரை ட்ராப் செய்ய வேண்டும். அதிலுமே கூட பெரிய சிரமம் இருக்காது. ஓவர்டன்/சாம் கரண் இறங்கும் அந்த நான்காவது ஸ்லாட்தான் இன்னும் க்ளிக் ஆகவில்லை. ஆக, ஓவர்டனை ட்ராப் செய்துவிட்டு கான்வேயை உள்ளே அழைத்து வந்துவிடலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com