அயல்நாடுகளிலேயே அதிக கிரிக்கெட் ஆடியிருக்கும் டெவான் கான்வே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடத் தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டார் என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கான பதிலில் கான்வேக்கு ஒரு பாராட்டு பத்திரமே வாசித்திருந்தார் மைக் ஹஸ்ஸி.
அவர் பேசியதாவது, “டெவான் கான்வே பெரும் ஆற்றலோடு இங்கே வந்திருக்கிறார். இங்கே இந்தியாவில், குறிப்பாக சேப்பாக்கத்தில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பேரார்வமும் ஊக்கமும் அவரிடம் இருக்கிறது. ருத்துராஜூடன் இணைந்து சீராக அவர் எடுக்கும் ரன்கள் அணிக்குப் பெரிய உதவியாக இருக்கிறது” என்றார்.
ப்ளேஆப்ஸ் பற்றி ட்ரெஸ்ஸிங் ரூமில் ஏதேனும் பேசப்படுகிறதா என கேட்கப்பட்டதற்கு, “புள்ளிப்பட்டியலில் கீழே இருக்கும் டெல்லியால் கூட ப்ளேஆஃப்ஸ்க்குத் தகுதிபெற முடியும் என்கிற சூழல் நிலவுகிறது. இப்படி ஒரு நெருக்கமான புள்ளிப்பட்டியலை கொண்ட தொடரை நான் பார்த்ததில்லை. ஆனால், நாங்கள் இதைப்பற்றியெல்லாம் பேசிக்கொள்வதே இல்லை. டெல்லிக்கு எதிரான போட்டியின் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் எங்களின் இலக்காக இருக்கிறது” என்றார்.