CSK: ‘பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாதே சேமித்து வை’- தோனி குறித்து பிரசாந்த் வீர்|CSK: “Don’t spend money unnecessarily—save it,” says Prashant Veer about MS Dhoni

Share

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் 20 வயதுடைய இளம் வீரர் பிரசாந்த் வீரை சுமார் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் வீர், தோனியுடனான தனது முதல் சந்திப்பு குறித்து சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.

தோனி கொடுத்த அட்வைஸ்

“Sports Star’-ன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்த் வீர், “மஹி பாய் என்னை முதலில் சந்தித்தப்போது கிரிக்கெட் பற்றி அதிகம் பேசவில்லை. ஐபிஎல் ஒப்பந்தம் செய்த பிறகு எனக்கு கிடைத்த பணத்தை ‘தேவையில்லாமல் செலவு செய்யாதே சேமித்து வை’ என்று அட்வைஸ் செய்தார்” என்றிருக்கிறார்.

பிரசாந்த் வீர்

பிரசாந்த் வீர்

ஜடேஜா இடத்தை பிடிப்பீர்களா?

தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் நீங்கள் ஜடேஜா இடத்தை பிடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், ” ஜடேஜாவின் இடத்தை நான் பிடிக்க வேண்டும் என நினைத்தால், அது எனக்கு அழுத்தத்தை தான் அதிகம் கொடுக்கும். அவர் சிஎஸ்கே அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் செய்ததை ஈடுசெய்வது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது.

நான் என்னிடம் என்ன இருக்கிறதோ, எது என்னை இந்த இடத்திற்கு அழைத்துவந்ததோ அதை சரியாக செய்யவே முயற்சிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com