Couple Story: `கீமோதெரபி எடுத்துக் கொண்டால் ராட்சத பலூனில் பறக்க வைக்கிறேன்’ – நெகிழ்ச்சிக்கதை! | woman fights with cancer after chemo visits turkey hot air balloon

Share

தம்பதியாக வாழ்ந்து வந்த ஹன்னா மற்றும் சார்லியின் வாழ்வில், புற்றுநோய் ஒரு பிரச்னையாக வந்து ஹன்னாவை தாக்கியது. வலி மிகுந்த அந்தச் சிகிச்சையை மேற்கொள்ள யாருக்குத்தான் பயம் இருக்காது. அப்போதுதான், `கேன்சரை குணப்படுத்த மேற்கொள்ளப்படும் கீமோதெரபி சிகிச்சையை முழுவதுமாக நீ முடித்துவிட்டால் உன்னை நான் துருக்கி கேபடோஷியாவில் பறக்கும் ராட்சத பலூனில் அழைத்துச் செல்கிறேன்’ என வாக்குறுதி அளித்தார், சார்லி.

ஒவ்வொரு கீமோதெரபி சிகிச்சைகளையும் தன்னுடைய கனவின் ஒரு பகுதி நிறைவேறியதாக ஏற்றுக் கொண்டார் ஹன்னா. முழுவதுமாக சிகிச்சை முடிந்த பின்பு, ஏற்கெனவே கூறியபடி துருக்கிக்கு அழைத்துச் சென்று பலூனில் பறக்க வைத்துள்ளார்.

நான்கு முறை கோவிட் மற்றும் கேன்சரால் தடைப்பட்ட இவர்களின் பயணம், இறுதியாக நிறைவேறியது. இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்தப் பதிவு வைரலாகி, பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது. பலரும் இந்தத் தம்பதியினருக்குக் கூடுதல் பலமும், ஆரோக்கியமும் கிடைக்கப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com