COP29: டிரம்ப், அஜர்பைஜான் – இந்த ஆண்டு காலநிலை மாநாடு சர்ச்சையாவது ஏன்?

Share

காலநிலை மாற்றம், அஜர்பைஜான், COP29

பட மூலாதாரம், Reuters

காலநிலை மாற்றம் குறித்த உலகநாடுகளின் உச்சி மாநாடான COP29 இன்று (திங்கள், நவம்பர் 11) அஜர்பைஜானின் தலைநகரான பாகுவில் துவங்கியது.

அடுத்த இரண்டு வாரங்கள் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் 200 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டு அஜர்பைஜானில் நடைபெறும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கம், ஏழை நாடுகளில் புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் வாயுக்களை கட்டுப்படுத்த நிதியளிப்பது, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் விளைவுகளை எதிர்கொள்ள அந்த நாடுகள்க்கு எதிர்காலத் திட்டமிடல்களை உருவாக்குவது என்பனவாகும்.

ஆனால், காலநிலை மாற்றத்தில் நம்பிக்கையில்லாதவராக அறியப்படும் டொனால்ட் டிரம்பின் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி, போர்கள், வாழ்க்கைச் செலவு நெருக்கடிகள் ஆகியவை இதற்குத் தடையாக இருக்கின்றன. சில முக்கிய தலைவர்கள் கூட இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com