TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வு ஒத்திவைப்பு: தேர்வு மையக் குளறுபடி |Chaos at Exam Centres: TNPSC Group 2, 2A Mains Postponed

இன்று TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு நடக்க இருந்தது.ஆனால், சென்னையில் அரும்பாக்கம் மற்றும் நந்தனத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.அதாவது, அந்தத் தேர்வு மையங்களில் பல தேர்வர்களின் பதிவு எண் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.இதனால், தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து, இன்று நடக்கவிருந்த TNPSC குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்வு தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அடுத்த தேர்வுத் தேதி எப்போது என பின்னர்‌ அறிவிக்கப்படும் என்று…

T20 உலகக்கோப்பை IND vs USA: நெருக்கடியிலிருந்து இந்தியாவை மீட்ட சூர்யகுமார் யாதவ் பேச்சு|Calm Under Fire: Suryakumar Yadav’s Knock Seals IND vs USA

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணித்து பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். சூர்யகுமார்‌ யாதவ்பவர் பிளே முடிவில்…

தாயின் நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் – பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் காரணமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்7 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்பாலித்தீன் உறைகளில் அடைத்து விற்கப்படும் உப்பு, சர்க்கரை மற்றும் குடிநீர் பாட்டில்களில் நுண் நெகிழி என அழைக்கப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.எதிர்கால சந்ததியினருக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், அவற்றில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிப்பதற்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டனர்.முன்னதாக, தாயின்…

'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! – முதல் போட்டியை எப்படி வென்றது இந்தியா?

டி20 உலகக்கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டமென்றாலும் போட்டி இந்தியா vs இந்தியா என்பதைப் போன்றே இருந்தது. அமெரிக்க அணியில் அத்தனை இந்தியர்கள். பலருக்கும் மும்பைதான் சொந்த ஊர். வான்கடேவில்தான் கிரிக்கெட்டே பயின்றிருக்கிறார்கள். அதனால்தானா என்னவோ இந்திய அணியை அத்தனை எளிதாக வெல்ல விடவில்லை. இயன்றளவுக்கு சவால் அளித்தார்கள்.Ind vs USAஇந்திய அணியின் கேப்டன் சூர்யகுமாரின் அட்டகாசமான இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறது. டாஸை அமெரிக்க கேப்டன் மோனாங் படேல்தான்…

விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம் சூடிய மூவர்!

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழிகாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இணைந்து தமிழகம் முழுக்க சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தற்போது நடைபெறும் மூன்றாவது சீசனின் முதல் போட்டி விழுப்புரத்தில் இன்று தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர், வளவனூர், செஞ்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.டாப் 10 தேர்வாளர்கள்அத்துடன் கடலூர்,…

My Lord: "ராஜூ முருகன் ஜெயிக்கிறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்!" – சசிகுமார்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் ‘மை லார்ட்’ திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ‘மை லார்ட்’ படத்தில்…மேடையில் நடிகர் சசிகுமார் பேசுகையில், “‘மை லார்ட்’ திரைப்படம் ஒரு கோர்ட் ரூம் டிராமா கிடையாது. ‘முத்துச்சிற்பி’ங்கிற கடைகோடி மனிதனைக்…

பாகிஸ்தான் vs நெதர்லாந்து – உலகக் கோப்பை தொடக்க ஆட்டமே பரபரப்பு

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியே ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது. கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து நெதர்லாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.தொடர்ந்து முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் வேகமும் துல்லியமும் நிறைந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து…

இந்திய அணிக்கு எதிராக அமெரிக்க அணியில் களமிறங்கும் இந்திய வம்சாவளி வீரர்கள்

பட மூலாதாரம், ICC/Getty Imagesபடக்குறிப்பு, சுபம் ரஞ்சனே, சௌரப் நேத்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங்கட்டுரை தகவல்மும்பையில் பிறந்த ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ஒரு நாள் வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும்.இதற்கு சுபம் ரஞ்சனே, சௌரப் நேத்ரவால்கர் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் மட்டும் விதிவிலக்கல்ல. இவர்கள் மூவரும் தற்போது தங்கள் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்தியாவுக்காக அல்ல, மாறாக அமெரிக்கா அணிக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவார்கள்.பிப்ரவரி 7-ஆம்…

U19 World Cup : தீபேஷ், அம்ப்ரிஷ்!உலகக்கோப்பை அணியில் ஜொலித்த தமிழ்நாட்டு தங்கங்கள்! – யார் இவர்கள்?

தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அணிக்குத் தொடர்ந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் தங்களின் முக்கியமான பங்களிப்பை அளித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் வேகப்பந்து வீச்சாளர் தீபேஷ் மற்றும் ஆல்ரவுண்டர் R.S. அம்ப்ரிஷ்.தீபேஷ் தேவேந்திரன்தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன், தனது அசத்தலான பந்துவீச்சுத் திறமையால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். அதன் பலனாக, தமிழ்நாடு பிரீமியர்…

ராகி ப்ரௌனி டு பிரண்டை வத்தல்.! பிரமாண்டமாக துவங்கிய `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3

அவள் விகடன் சக்தி மசாலாவுடன் இணைந்து வழங்கும் `சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3’ விழுப்புரம் ஹமித்ரா மஹாலில் பிரம்மாண்டமாக தொடங்கியது. `உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை!’ என்ற தலைப்பில் புதுச்சேரி, வேலூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு உள்ளிட்ட 12 பகுதிகளில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று, சென்னையில் நடைபெற இருக்கிறது. விழுப்புரத்தில் இன்று தொடங்கியிருக்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம், அரசூர், கோலியனூர்,…