Yash Dayal; RCB; திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக தன்மெது புகாரளித்த யஷ் தயாள் பெண்மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி போலீஸில் புகாரளித்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆர்.சி.பி பவுலர் யஷ் தயாள் தன்னுடன் 5 ஆண்டுகள் ரிலேசன்ஷிப்பில் இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னைச் சுரண்டியதாகவும் ஜூன் 21-ம் தேதி மாநில முதல்வர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்திருந்தார்.அந்தப் புகாரின்படி யஷ் தயாள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69 (திருமணத்தில் பேரில் ஏமாற்றுதல்)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.யஷ் தயாள் | Yash Dayalஇந்தப் பிரிவில், யஷ்…









